Tamil Nadu Thowheedh Jamaath South Chennai Inaugurated Assistance Centre for Covid Affected Persons


சென்னை: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை எடுத்துரைக்கும் வண்ணம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம்  தலைமை அலுவலகத்தில் அரசு ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் இன்று 29.05.2021 மாலை 4.00 மணி அளவில் கொரோனா வழிகாட்டுதல் மையம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில செயலாளர் E. பாரூக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Video👇👇

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் M. ஹபிபுல்லாஹ் பாஷா அவர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர் முஹம்மத் பயாஸ், மாவட்ட துணை தலைவர் சித்திக், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சர்பராஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.

இந்த வழிகாட்டுதல் மையம் மூலம் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், ஆம்புலன்ஸ் சேவை, அவசர இரத்த தான சேவை கொரோனா நோய் தொற்றினால் இறந்த அணைத்து சமுதாயத்தினரை அரசு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உணவின்றி இருக்கும் மக்களுக்கு உணவு அளிப்பது, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு அளிப்பது மருத்துவம் தொடர்பான ஆலோசனை வழங்குவது, உடல் நலம் இல்லாதவர்களை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும், இச்சேவையினை பெற 24x7 கைப்பேசி 77080 63490 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .

****

Popular posts from this blog

Indian Coast Guard Veterans Welfare Association Marks 8th Raising Day | Launches New Flag & Website 2.0

5700 Brilliant Minds from India & 11 Countries Shine at SIP Abacus Prodigy 2025 Chennai Competition

Tamil Nadu's FIRST: Apollo Hospitals Launches Cutting-Edge Parkinson's & Deep Brain Stimulation (DBS) Centre!

Bhagawan Sri Sathya Sai Baba Centenary Celebrations at Advocate M.K. Govindan's Residence; 317th Study Circle

Lancor Expands Portfolio Across Senior Living, Premium Urban Homes & Suburban Growth