நடிகை ரைஸா வில்சன் மீது 5 கோடி நஷ்ட ஈடு வழக்கு, தொடுத்தது Skin Health Foundation

சென்னை, ஏப்ரல் 27, 2021: தவறான முகப் பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி நடிகை ரைசா பொய்யான தகவலை பதிவிட்டதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை Skin Health Foundation நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

Video👇👇

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நடிகை ரைசாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் மற்றும் மருத்துவர் பைரவி செந்தில் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், மருத்துவமனையின் மீது தவறான புகாரை பதிவு செய்ததால் நடிகை ரைசா தங்களுக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் விரிவான செய்திகள்:

நடிகை ரைசாவை கட்டாயபடுத்தி எந்த ஒரு சிகிச்சையும் வழங்கவில்லை, மருத்துவமனை மீது பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளோம்.

சென்னை ஆழ்வார்பேட்டையில்  நடிகை ரைசா வில்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி செந்தில், மருத்துவர் பைரவி செந்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்:

நடிகை ரைசா வில்சன் எங்கள் மருத்துவமனையில் முதல் முறையாக சிகிச்சை பெற்றதாகவும் அதனால் மட்டுமே இப்படி பாதிப்பு எற்பட்டு இருப்பதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார் மேலும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கூறி இருந்தார்.

ஆனால் நடிகை ரைஸா வில்சன் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை மூன்று முறை சிகிச்சை பெற்றுள்ளார்,மேலும் அவர் பெற்று வரும் சிகிச்சையில் திடீரென இப்படி ஏற்படலாம் என்றும் அந்த பாதிப்பு அதிகபட்சமாக 8 நாட்களில் சரி ஆகிவிடும் என்று தெரிந்தும் இப்படி மருத்துவமனை மீது உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை தெரிவித்து உள்ளார்.

மேலும் அவரை கட்டாயபடுத்தி எந்த ஒரு சிகிச்சையும் நடைபெறவில்லை, முழுமையாக சிகிச்சை குறித்து விளக்கமளித்து அவரிடம் கையொப்பம் பெற்ற பின்னரே சிகிச்சை நடைபெற்றது.

எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்,சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை,இதுகுறித்து எந்த ஒரு விசாரணைக்கும் தயாராக உள்ளோம்.

****

Recent Posts