தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களை ஒன்றிணைக்க நம்மில் நாம் திட்டம் || இளைஞர் மக்கள் சபைக்குழு துவக்கம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களை ஒன்றிணைத்து இயற்கை விவசாயத்தை மேம்படுத்த "நம்மில் நாம்" திட்டத்தையும் இளைஞர் மக்கள் சபைக்குழு துவங்கி பணியாற்ற திட்டமிட்டுள்ளோம் என்கிறார் ஆயுத எழுத்து எழுச்சி மற்றும் இளைஞர் மக்கள் இயக்கத்தின் தலைவர் சிவசுரேஷ்.
Video👇
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (16 02 2021)செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆயுத எழுத்து எழுச்சி மற்றும் இளைஞர் மக்கள் இயக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பணியில் களம் ஆற்றி வருகின்றோம்.
(L to R) M. Siva Suresh, Founder, Audha Ezhuthu Ezhuthi; M.Ramar, State Secretary) |
செயல் திட்டங்கள்:
இளைஞர் மக்கள் சபை குழு அமைத்தல்;
கிராமங்களை வளர்ச்சிபடுத்துதல்;
இயற்கை விவசாயம் கொண்டு வருதல்;
எங்குமே தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்க கொண்டும் வரும், பாதான நீர் வழித்திட்டம் மற்றும் நவீன நீர் வழிச்சாலைத்திட்ட கொண்டு வருதல்;
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் அமைத்து தரமான கல்வி தருவது;
அரசு மருத்துவமனையை தனியார் மருத்துவமனையை போல் சீர் அமைத்து எல்லாம் வசதிகள் கொண்டு தரமான மருத்துவம் கொண்டு வருதல்;
இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் தகுதிகேற்ற வேலைவாய்ப்பு தருதல்;
இளைஞர்களுக்கு தகுதிகேற்றபடி தொழில் அமைத்து தருதல்;
மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஊக்கப்படுத்துதல்;
கட்டிட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஊக்கப்படுத்துதல்;
பெயிண்டிங் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஊக்கப்படுத்துதல்;
நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஊக்கப்படுத்துதல்;
அனைத்து தொழிலாளர்களுக்கு நலவாழ்வுத்திட்டம் கொண்டு வருதல், அனைத்து மகளிர்களுக்கும் அவர்களின் தனிதிறனை மேம்படுத்த ஊக்குவித்தல்;
மகளிர்களுக்கான சுய தொழில் அமைத்து தருதல்;
உள்ளிட்ட பணிகளில் இளைஞர்களை களமிறக்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்றார்.
****