"ஸ்மார்ட் தமிழகம் - ஸ்மார்ட் இந்தியா, சந்தோஷ் தமிழகம் - சந்தோஷ் இந்தியா" - ஜி. இராமநாதன்

சென்னை: வாழ்க்கையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு விஷயமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குண்டான முயற்சிகள்தான். ஆனால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? இல்லையா என்பதைப்பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

Video👇

அதாவது, உலக அளவில் 156 நாடுகளின் மகிழ்ச்சிக் குறியீடு தரவரிசையில் (Happiness index rank ) இந்தியா 144 வது இடத்தில் இருக்கிறது. அதேபோன்று அமைதிக் குறியீடு தரவரிசையில் (peace index rank) 163 நாடுகளில் 141 வது இடத்தில் இருக்கிறது.

நம்முடைய சந்தோஷமின்மைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்றார் புத்தர். ஆனால் வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும், எல்லாவற்றிலுமே பிரச்சனைக்கு அடிப்படைக் காரணியாக இருப்பது மனித உறவுகள்தான்.

G. Ramanathan, Author
இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்திய நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைச் சொல்லலாம். அதாவது இந்திய நீதி மன்றத்தில் சுமார் 3.75 கோடி முதல் 4 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகளும் இருக்கின்றன. இதில் 76 சதவித வழக்குகள் சொத்து பிரச்சினைப் பற்றியது.

ஆகையால், நமது சந்தோஷத்தை கெடுக்கும் காரணியை கண்டுபிடித்து சந்தோஷத்தை சாத்தியமாக்குவது எப்படி என்ற முயற்சிக்கான ஒரு சிறு விதைதான் இது.

இதை செயல்முறைப்படுத்த பல அரசியல் தலைவர்களையும், பிரமுகர்களையும், அறிவுஜீவிகளையும் சந்திப்பேன். அதற்கான ஒத்துழைப்பை தருமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையான ஒரு மைனாரிட்டி சமூகம் எதுவென்று கேட்டால், அதீத அறிவு ஜீவிகள்தான். இந்த சிறு சதவிகித அறிவுஜீவிகள் எல்லா மதங்களிலும், இனங்களிலும் இருக்கிறார்கள்.

இந்த அறிவுஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்று ஒரு சிறந்த தமிழகத்தை உருவாக்க, அதன் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்க, அவர்களை ஒன்றிணைக்க VIPTAMINS (Vivegam Interactive Platform for Tamil Intellectual International Indians) எனும் ஒரு முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதில் அறிவுஜீவிகள் தங்களை இணைத்துக் கொள்ள அன்புடன் வரவேற்கிறோம்.

நடுவண் அரசில் ராஜ்யசபா என்பதும், மாகாண அரசில் (M.L.C.) மேல்சபை என்பதும் பல துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த அறிவுஜீவிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் வழிகாட்டுதலைப் பெற்று செயல்படுவதற்காகத்தான ஏற்படுத்தப்பட்டது.

இப்போதும் இந்தியாவில் மாகாணங்களில் இந்த மேல்சபை இருக்கிறது. தமிழகத்திலும் இதை ஏற்படுத்துவதற்கு வரப்போகிற அரசு கவனத்தில் கொள்ளலாம்.

நம்முடைய இலக்கு:

1) அறிவார்ந்த, ஆனந்தமான இந்தியாவை உருவாக்க வேண்டும்.

2) புவி வெப்பமயமாதலுக்கு மரபுசாரா எரிசக்தியின் மூலம் தீர்வு காண்பதில் இந்தியா பெரும் பங்காற்ற வேண்டும்.

3) உலக அமைதியை இந்தியா முன்னெடுத்து அமைதிக்கான நோபல் பரிசையும் பெற வேண்டும்.

4) அடுத்த கிரகத்தில் குடியேறப்போகும் முதல் மனிதன் இந்தியனாகவோ, இந்திய வம்சாவழியினராகவோ இருக்க முடியும்.

இதனால் நான் சொல்ல விரும்புகிற செய்தி

1) பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்.

தேச நலனுக்காகவும் சமூகத்திற்காகவும் தங்களது பங்களிப்பை தருவதற்கு பல துறைகளிலும் அறிவு ஜீவிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒன்றிணைக்க, அவர்களின் அறிவை, திறமையை பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம்.

ஒரு கடைக்கோடி மனிதனுக்கும் விரைவில் நீதி கிடைக்க உறுதி செய்யுங்கள்.

நாம் மற்ற எல்லா துறைகளிலும் முன்னேறுகிற அதேநேரத்தில், ஒரு சந்தோஷமான இந்தியாவை உருவாக்கும் முயற்சியையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை தங்களிடம் சமர்ப்பிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

2. மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு

நம் தமிழகம் இந்தியாவில் ஒரு சிறந்த முன்னோடி மாநிலமாக, "ஸ்மார்ட் தமிழகம் - சந்தோஷ் தமிழகம்" உருவாவதற்குண்டான அனைத்து வாய்ப்புகளும் இங்கே இருக்கின்றன. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை தங்களிடம் சமர்ப்பிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

சந்தோஷ் இந்தியா பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஜனநாயகத் தூண்களில் ஒன்றாக விளங்கும் ஊடகத்துறையினர் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டுகிறேன்.

இதனால் நம் நாடும், சமூகமும் நலம் பெறும் என்றால், நானும், நீங்களும், நம் குடும்பமும் நலம் பெறும் என்றுதான் பொருள். காரணம் நாமும் இந்த சமூகத்தில்தான் இருக்கிறோம். இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Author details:

G. Ramanathan
Annai Illam, Kuruvimalai,
T.V.Malai District- 606 751
Mobile: 97916 71591
Email: monosho.g.r@gmail.com

****

Recent Posts