Bharatiya Mansoor Sangh Tamilnadu || Press Meet
இன்றைய சூழலில் தொழிலார்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு
For videos, click:
பத்திரிக்கை செய்தி:
பாரதிய மஸ்தூர் சங்கம் நூற்றாண்டு கண்ட தலைவர் தத்தோபந்த் டெங்கடிஜி என்ற மகானால் 1955ல் தொடங்கப்பட்டு 29.03.1956ல் நடைப்பெற்ற B&C மில் தொழிலாளர் பிரச்சனை முதற்கொண்டு இன்றுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சனை வரை தமிழகத்தில் உள்ள அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளிலும் அரசியல் சார்பற்று செயல்பட்டு வருகிறது.
இன்று 22.12.2020 சென்னையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாாதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய தலைவர் ஸ்ரீமான் ஹிரன்மைய் J பாண்ட்யா வருகைபுரிந்து இன்றைய சூழலில் உள்ள தொழிலாளர் பிரச்சனை குறித்து விவாதித்தார்.
அதுசமயம் தேசிய துணைத்தலைவர் ஸ்ரீமான் M ஜெகதீஸ்வர் ராவ், துறைமுகத் தொழிலாளர் கூட்டமைப்பின் புதிய பொறுப்பாளர் ஸ்ரீமான் சந்திரகாந்த் B. தூமல், துறைமுகம் மற்றும் கப்பல்துறை கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீமான் K.பாவானிசங்கருடு, தமிழ்மாநிலத்தலைவர் ஸ்ரீமான் N சிதம்பரசாமி, மாநிலப் பொருளாளர் திரு. கோபால், சென்னை, திருவள்ளூர் மாவட்ட மாநிலப்பொறுப்பாளர் திரு. செல்வராஜூ, திரு.சீனிவாசன், சென்னை மாவட்ட தலைவர் திரு... சுந்தர் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கலந்தாய்வினை சிறப்பித்தனர்.
1) தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஊதிய தொகுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு தொகுப்புகளை வரவேற்கும், அதே சமயத்தில் வேலையின் ஸ்திரத்தன்மையின்மை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் இதர இரண்டு தொகுப்புகளில் உள்ள சில பிரிவுகளை திருத்த வலியுறுத்தியும்,
2) லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, தொழிலாளர் நியமனத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை, இயந்திரமயமாதல் தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவை நிகழ்வதற்கு காரணமான அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம்
3) நம்நாட்டின் சிறு, குறு மற்றும் குடிசை தொழில்களையும், சிறு வணிகத்தையும் பெருமளவில் பாதிப்பதை தடுப்பது/மற்றும் மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய விவசாயத் துறையை பாதுகாத்திடவும்,
4) மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு/திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கிடவும், அமைப்பு சாரா துறையை சார்ந்த நலவாரிய பயனாளிகளுக்கு உரிய காலத்தில் பயன்களை வழங்க வலியுறுத்தியும், நலவாரியத்தில் உறுப்பினராக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் சேவையை எளிமைப்படுத்திடவும் அனைத்து பகுதியினரையும் உள்ளடக்கிட வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
5) பதிய பென்ஷன் திட்டத்தை நிறுத்தி, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி வலியுறுத்துவது,
6) துறைமுகம்- மதுரவாயல் ஹைவே திட்டத்தை விரைந்து, தொடங்கிடவும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் இக்கூட்டம் வலியுறுத்தியும்,
7. (i) பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனை கூடாது,
(ii) நோடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது,
(iii) ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும்
(iv) சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்
(v) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் 100 நாள் என்பதற்கு மாறாக 200 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும்.
(vi) அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BMS நடத்தப்போகும் போராட்டங்களை வெற்றி பெற செய்யவேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.
கூட்ட தலைமை :
திரு. செல்வராஜூ, சென்னை மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்க மாநிலப் பொறுப்பாளர்,
வரவேற்பு :
திரு. சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட மாநிலப்பொறுப்பாளம்,
நன்றியுரை :
திரு. M மணிகண்டன், சென்னை துறைமுக செயல் தலைவர்.
திரு.N சிதம்பரசாமி
தமிழ்மாநில பாரதிய மஸ்தூர் சங்கம்
பாரதீய மஸ்தூர் சங்கம், தமிழ்நாடு
- கேசவர் குடில்”, No 5, ரங்கசாயி தெரு, பெரம்பூர், சென்னை - 600 011.
E-Mail: bmstamilnadu@gmail.com Phone : 044 - 4551 0095.
KESAVAR KUDIL NO 5. RANGASAYEE STREET PERAMBUR, CHENNAI - 600011
****