போரூரில் தனது 50-வது கிளையைத் தொடங்கும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்


  • போரூரில் புதிய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டதையொட்டி டிசம்பர் 7 மற்றும்  8 ஆகிய தேதிகளில் இலவச நீரிழிவு நோய் கண்டறிதல் முகாமை நடத்துகிறது
சென்னை, 6 டிசம்பர் 2019: நீரிழிவு பாதிப்புள்ள இந்தியர்களில் 50% தங்களது பாதிப்பு நிலையை உணராதவர்களாக இருக்கின்றனர் என்பது பலருக்கும் தெரிந்த ரகசியம்.  தரமான நீரிழிவு சிகிச்சைப் பராமரிப்பிற்கான அணுகுவசதி இல்லாத காரணத்தால் கிராமப்புற மக்களிடம் இந்த அறியாமையும், உதாசீனமும் அதிகமாக இருக்கிறது.  வெகுசில மருத்துவமனைகளே அவர்களது பிராந்திய மற்றும் கிராமப்புற பகுதிகளில் மிக நவீன வசதிகளையும், மருத்துவமனைகளையும் கொண்டிருக்கின்றன.  சர்வதேச புள்ளியியல் விவரங்களின்படி 72.3 மில்லியன் நபர்களைக்கொண்டு உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் 2-வது மிக உயர்ந்த எண்ணிக்கையை இந்தியா தற்போது கொண்டிருக்கிறது மற்றும் 2045 ஆம் ஆண்டிற்குள் 134.3 மில்லியன் நபர்களைக் கொண்டு உலகின் நீரிழிவு தலைநகரமாக இந்தியா இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Lighting the lamp by Mr Gopal Menon - COO, Dr Mohan’s Diabetes Specialities Centre
நீரிழிவு சிகிச்சையில் இந்தியாவின் முதன்மையான உயர் நேர்த்தி மையமாக திகழும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிகிச்சை மையமானது, நாடெங்கிலும் முழுமையான சேவை வழங்கும் கிளினிக்குகளை தொடங்குவதன் மூலம் அச்சுறுத்தும் இந்த போக்கை எதிர்கொள்வதற்கு தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகிறது.  எண்.10 ஆற்காடு சாலை, லட்சுமி நகர் (நாயுடு ஹால் எதிரில்). போரூர் என்ற முகவரியில் சென்னை மாநகரின் இப்பகுதி மக்களுக்காக ஒரு கூரையின் கீழ் நீரிழிவு தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் வழங்குகின்ற ஒரு புதிய சிகிச்சை மையத்தை டாக்டர் மோகன்ஸ் இப்போது தொடங்கியிருக்கிறது.  2019 டிசம்பர் 9 ஆம் தேதியிலிருந்து மருத்துவ சேவைகளுக்கான சந்திப்பு போரூர் மையத்தில் தொடங்கப்படுகிறது.  தனது நோயாளிகளுக்காக அவர்களது வீட்டிற்கே சென்று சிகிச்சை தொகுப்பை டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Mr Appadurai , HR head  and Dr Honey Evangeline , Consultant at Dr Mohan’s Diabetes Specialities Centre, Porur
நீரிழிவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வரும் நிலையை தடுத்து நிறுத்துவதற்கு உகந்த சிகிச்சை முனையாக, பத்மஸ்ரீ டாக்டர். வி. மோகன் அவர்களால் 1991 ஆம் ஆண்டில், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.  நீரிழிவு பாத சிகிச்சை, நீரிழிவிற்கான கண் சிகிச்சை மையம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆலோசனை, நோயாளிகளுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு, நீரிழிவு நோயாளிகளுக்கான காலணிகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளிலான சேவைகளை ஒற்றைக்கூரையின் கீழ் வழங்கிவரும் டாக்டர் மோகன்ஸ், இத்தகைய சிகிச்சைப்பிரிவில் இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பாக செயலாற்றி வருகிறது. 
Mr. Gopal Menon, COO, Dr Mohan’s Diabetes Specialities Centre addressing the gathering
'28 ஆண்டுகளுக்கும் அதிகமாக, இங்கு கிடைக்கக்கூடிய மிக நேர்த்தியான நீரிழிவு சிகிச்சையைப் பெற மக்கள் ஆர்வத்தோடு எமது மருத்துவ மையங்களுக்கு வந்திருக்கின்றனர்.  இந்தியாவில் எங்களது கால்தடத்தை மிக விரைவாக நாங்கள் விரிவாக்கம் செய்து வருகிறோம்.  இந்தியாவெங்கும் உள்ள மக்களுக்கு பிரத்யேக நீரிழிவு சிறப்பு சிகிச்சை பராமரிப்பை எமது வலையமைப்பின் மூலம் வழங்கி வருகிறோம்.  கடந்த காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீரிழிவு சிகிச்சை மையங்களைத் தொடங்கியதற்குப் பிறகு, இந்தியாவெங்கிலும் நோயாளிகளுக்கு நிபுணத்துவம்மிக்க சிகிச்சை பராமரிப்பையும் மற்றும் நவீன ஆராய்ச்சியின் பலன்களையும் வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை இப்போது நாங்கள் கொண்டிருக்கிறோம்.  இப்பணியில் ஈடுபட்டுள்ள பல நபர்களின் சிறப்பான தாராள குணம் மற்றும் தர்ம சிந்தனையின் வழியாக, வரவிருக்கும் ஆண்டுகளிலும் இந்த சிகிச்சை அவசியப்படுகின்ற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான நீரிழிவு சிகிச்சையை வழங்குகின்ற தனது பாரம்பரியத்தை டாக்டர் மோகன்ஸ் தொடர்ந்து செயல்படுத்தும்,” என்று டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரான டாக்டர். வி. மோகன் கூறினார்.

போரூரில் தொடங்கப்பட்டுள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் மருத்துவ ஆலோசகர்களான டாக்டர். ஹனி இவாஞ்சலின் மற்றும் டாக்டர். ராமு இது தொடர்பாக கூறியதாவது: 'டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன சாதனங்களும், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும், நீரிழிவு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுவதை உறுதிசெய்ய உதவுவதோடு, நீரிழிவுக்கு தரமான சிகிச்சை மற்றும் ஆதரவையும் மக்களுக்கு வழங்கி வருகிறது.  ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மக்கள் நடத்துவதற்கு அவர்கள் கற்றுக்கொள்ளவும், திறனதிகாரம் பெறவும் மற்றும் உரிய ஆலோசனை வழங்குவதும் எமது மையத்தின் நோக்கமாகும்.  அத்துடன் நீரிழிவு மேலாண்மை குறித்து மக்கள் மனதில் நிலவுகின்ற தவறான கட்டுக்கதைகளை தகர்ப்பதும் எங்களது குறிக்கோளாக இருக்கிறது.  நீரிழிவை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் மற்றும் நீரிழிவு நிலையுள்ள நபர்களுக்கு மிக திறம்பட அதனை மேலாண்மை செய்வதற்கும் சிறப்பான சேவையை நாங்கள் வழங்க காத்திருக்கிறோம்'.

நீரிழிவு மேலாண்மைக்காக நவீன மருத்துவ சாதனங்களை டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் கொண்டிருக்கிறது.  இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவால் மேற்கொள்ளப்படும் ஆழமான மற்றும் விரிவான ஆராய்ச்சியின் பயன்கள் இந்த நோயாளிகளுக்கு கிடைக்குமாறு செய்யப்படுகிறது.  நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய சிக்கல்கள் மீதான ஆய்வை மேற்கொள்ளவும் மற்றும் ஆய்வின் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்ற நோக்கத்தோடு, 1996 ஆம் ஆண்டில் தி மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையானது (MDRF), டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் தொடங்கப்பட்டது. 

மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கு முன்பதிவு செய்ய 7825888733 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது www.drmohans.com வலைதளத்திற்கு விஜயம் செய்யலாம்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து: 1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது, உலகளவில் நீரிழிவுக்கான சிறப்பு சிகிச்சையில் மிகப்பெரிய சங்கிலித்தொடர் அமைப்பாக திகழ்கிறது.  தமிழ்நாட்டில் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கு இது தொடர்பான முழுமையான சேவைகளை வழங்கி வருகிறது.  இந்தியாவில் இப்போது டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது, 50 மையங்களையும், கிளினிக்குகளையும் நீரிழிவு சிகிச்சைக்கென்றே கொண்டிருக்கிறது.  இந்த மையங்களில் 4.8 இலட்சத்திற்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் தங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.  முழுமையான நீரிழிவு பராமரிப்பு சிகிச்சை, நீரிழிவு பாதிப்புள்ள கண்களுக்கான சிகிச்சை, நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள பாதங்களுக்கான சிகிச்சை சேவைகள், நீரிழிவு தொடர்பான இதய சிகிச்சை, நீரிழிவு தொடர்பான பல் மருத்துவ சிகிச்சை, நீரிழிவு வராமல் முன்தடுப்பு பராமரிப்பு, உணவுமுறை குறித்த ஆலோசனை மற்றும் ஒரு நவீன பரிசோதனையகம் ஆகிய சேவைகளை இக்குழுமத்தின் சிகிச்சை மையங்கள் வழங்கி வருகின்றன.  www.drmohans.com என்ற இணையதளத்தின் வழியாக மருத்துவ சேவைகளுக்கான முன்பதிவுகளை செய்ய முடியும். 

On Twitter: 
https://twitter.com/chennaipresnews/status/1203201738544517120?s=20
💥💥💥

Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦