"திராவிட ஒழிப்பு மாநாடு"- தமிழர் குடிகள் கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 05 அன்று மதுரையில் நடைபெறும்
சென்னை: தமிழர் குடிகள் கூட்டமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளர் கு.செந்தில்மள்ளர் இன்று பத்திரிக்யாளர்கள் சந்திப்பில் "திராவிட ஒழிப்பு மாநாடு" நவம்பர் 05 அன்று மதுரையில் நடைபெறும் என்று அறிவித்தார்.
Press meet youtube video link 👇
மேலும் அவர் கூறியதாவது. கடந்த 2023 ஆகத்து 29 சென்னையில் நடைபெற இருந்த திராவிட ஒழிப்பு மாநாட்டினை திராவிடர்களின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் தடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தோம். சென்னையில் நவம்பர் 01 இல் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மழைக்காலம் என்பதால் இடமும் தேதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 05 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும். அதற்கான அனைத்து வகையான பணிகளும் செயலாக்கம் பெற்று வருகின்றன.
இந்த முன்னெடுப்பையும் திராவிடர்கள் காவல்துறை கொண்டு தடுக்க முயற்சிக்கலாம். அவைகளை சட்டத்தின் துணை கொண்டு முறியடித்து மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். எது கேடு என்று கருதினாலும் அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கருத்துரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த நாட்டில் சாதி ஒழிப்பு மாநாடு. தீண்டாமை ஒழிப்பு மாநாடு, மது ஒழிப்பு மாநாடு, சனாதன ஒழிப்பு மாநாடு, ஆரிய ஒழிப்பு மாநாடு என அவரவர்கள் தங்களுக்குக் கேடு எனக் கருதியதை எதிர்த்து மாநாடுகள் நடத்தியுள்ளனர்.
அந்த வகையில் தமிழர்களாகிய எங்களுக்குப் பெருங்கேடாக அமைந்துள்ள திராவிட பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பதிவு செய்ய விரும்புகிறோம். 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 இல் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் தேவையற்ற கற்பனைக் கருத்தியலான திராவிடத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவது என்பது தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றும் செயலாகும்.
திராவிட என்ற சமசுகிருத சொல்லான பிராமணர்களின் சாதிப் பெயரில் இயக்கம் வைத்து அதிகாரம் செலுத்தும் அரசியல் கோமாளிகள் இதனை உணர்ந்து திருந்தி ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வேட்கையுடன் தங்களது பயணத்தையும் பாய்ச்சலையும் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆரியப் பூச்சாண்டி காட்டி திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட திராவிட போலி சிந்தனைகளில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டு அரசியலில் இருந்து திராவிடக் கட்சிகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தமிழர்கள் நடத்தும் திராவிட ஒழிப்பு மாநாடு என்பது திராவிட அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதிய கையோடு தமிழ் தேசிய அரசியலுக்கான முன்னுரையையும் எழுதி தமிழ்நாட்டு அரசியலில் ஓர் அடிப்படை மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்தும்.
****