திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இரண்டு இளம் சிறுவர்கள் 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிவித்து அசிஸ்ட் உலக சாதனை முயற்சி


சென்னை, ஆகஸ்ட் 3, 2021: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இளம் சிறுவர்கள் ஆ. ஆபிராம் வோஸ் (வயது 10) 5-ம் வகுப்பு 1330 திருக்குறள் கூரிய நேரம் 33.08 நிமிடங்கள் ஆ.அருணிஷ். ஷேண்டோ 1330 திருக்குறள் கூரிய நேரம் 25.47 நிமிடங்கள் (வயது7) 2-ம் வகுப்பை, கண்டமங்களம் ஒன்றியம் நவமால் காப்பேரில் உள்ள அரசு தொடக்கவள்ளியில் படித்து வரும் இவர்கள் மனப்பாடமாக ஒப்பித்து கோரிக்கை வைக்கும் சாதனை நிகழ்த்தினர்.

Video👇👇

இவர்களது பெற்றோர் தந்தை R.ஆறுமுகம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கடலாடித்தாங்கல் சொந்த ஊராகும். தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித் தேர்விற்காக படித்து வருகிறார் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதிச் தேர்வில், இராண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது மனைவி A.சுசான்னா இல்டா, கண்டமங்களம் ஒன்றியம் V.பூதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.

இச்சிறுவர்களின் ஆற்றலை அறிந்து விஜிபி உலக தமிழ்ச் சங்கத்துடன் இனைந்து அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ஏற்பாட்டில் இச்சாதனை நிகழ்வு செய்யப்பட்டுளள்ளது.

இந் நிகழ்வில் கலைமாமணி DR.V.G. சந்தோஷம், நிறுவனர். V.G.P உலக தமிழ் சங்கத்தின் தலைவர் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு அமைச்சர் செஞ்சி K.S. மஸ்தான் சிறுபான்பையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன். அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃகப் வாரியம், தமிழ்நாடு. அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனர் R.ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர் அ. வேல்முருகன், ஆசிரியர் தமிழ் தம்பி. DR. அருண்தாமஸ். அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் தேசிய ஒருங்கினைப்பாளர் ஆகியோர்கள் கண்காணிப்பாளராக செயல்பட்டனர்.

வரும் அக்டோபர் 15-ம் தேதி 2021 அசிஸ்ட் வேர்டு ரெக்கார்ட்ஸின் 10 ஆம் ஆண்டு நிறைவடையும் வேளையில் இக்கொரனா காலக்கட்டத்தில் அனைவரது திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் 1200 மணிநேர பன்னாட்டு இனையதள தொடர் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்துவரும் வேலையில் இச்சிறுவர்களின் சாதனை நிகழ்வை அனைவரையும் நேரடியாக சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம், சேப்பாக்கத்தில் அழைத்து செயல் படித்தி காண்பித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது.

****

Recent Posts

𝘈𝘤𝘶𝘱𝘶𝘯𝘤𝘵𝘶𝘳𝘦 𝘤𝘢𝘯 𝘤𝘶𝘳𝘦 𝘢𝘭𝘭 𝘗𝘩𝘺𝘴𝘪𝘤𝘢𝘭, 𝘔𝘦𝘯𝘵𝘢𝘭 𝘢𝘯𝘥 𝘓𝘪𝘧𝘦 𝘳𝘦𝘭𝘢𝘵𝘦𝘥 𝘥𝘪𝘴𝘦𝘢𝘴𝘦𝘴; 𝘌𝘹𝘱𝘦𝘳𝘵𝘴 𝘚𝘱𝘦𝘢𝘬 𝘥𝘶𝘳𝘪𝘯𝘨 "𝘒𝘯𝘰𝘸 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦 - 𝘕𝘰 𝘋𝘪𝘴𝘦𝘢𝘴𝘦" 𝘉𝘰𝘰𝘬 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩