பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சியினர் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


சென்னை, ஜூன் 21, 2021: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், ஜி.எஸ்.டி. வரியை மாநில அரசு குறைக்க வலியுறுத்தியும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சென்னை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்றது.

Video👇👇

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநிலச்செயலாளர் இனாயத்துல்லா ஷரீப் தலைமையேற்று கண்டன உரையாற்றுகையில், பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்திய பாஜக அரசு தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கிறது. 

மக்கள் மீது மத்திய அரசு நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் மீதானவரிகளை வெகுவாக குறைக்கவும், விலைவாசி உயர்வை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மத்தியசென்னை மாவட்ட தலைவர் இக்பால், பொருளாளர் ரியாஜ் அகமது, வடசென்னை மாவட்ட தலைவர் மஜ்லிஸ் மஸ்தான், துணை தலைவர் உஸ்மான் பாய், மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், இணைச்செயலாளர்கள் பாபு பாய்,சிராஜ் திருவள்ளூர் மாவட்ட  தலைவர் எஸ்.எஸ்.வசீம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

****

Recent Posts