முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்மந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்திய தேசிய லீக் கட்சி சிறைத்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்


சென்னை, செப்டம்பர் 13, 2021: இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக சிறைத்துறை தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் எழும்பூரில் மாநில தலைவர் தடா.அப்துல் ரஹிம் அவர்களின் தலைமையில் இன்று (13.09.2021) நடைபெற்றது...

Youtube Video👇👇

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நன்னடத்தை விதியை பின்பற்றி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசாணை வெளியிடுகிறது...

தமிழக அரசின் அரசாணையை ஜாதி மத பேதமின்றி நிறைவேற்றுவது சிறைத்துறை அதிகாரிகளின் கடமை ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுதலை செய்யாமல் பாரபட்சமாக
நடந்து கொள்கின்றனர் ...

தமிழக அரசின் அரசாணையில் முஸ்லீம் அரசியல் சிறைவாசிகள் விடுதலை செய்யக்கூடாது என்று எதாவது சிறப்பு சட்ட வரைமுறை தமிழக அரசு அரசாணையில் வெளியிடப்பட்டதா ? இல்லையே.

பிறகு எதற்காக இப்படி ஒவ்வொரு ஆண்டும் முஸ்லீம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலையில் சிறைத்துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்

அதே போன்று ஆயுள் தண்டனை பெற்று 6, 7 ஆண்டுகள் சிறையில்கழித்து விட்டால் வருடத்தில் 15 நாட்கள் பரோல் என்கிற விடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 30 நாட்கள் பரோல் என்கிற விடுப்பு சிறை கண்காணிப்பாளரால் வழிகாவல் இல்லாமல் சிறை விதியை பின்பற்றி ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படுகிறது..

முஸ்லீம் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகும் வழி காவல் இல்லாமல் பரோல் என்கிற விடுப்பு வழங்கப்படுவது இல்லை..

39 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் ராஜிவ் காந்தி வழக்கில் உள்ள ஏழு பேர் விடுதலை விஷயத்தில் தமிழக அரசாணை யை சாதி மத பேதத்தோடு செயல்படும் சிறைத்துறையை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மதுரை.ராஜா உசேன், மாநில பொருளாளர் முள்ளான்.செய்யது அலி,மாநில துணைத்தலைவர்கள் மல்லிபட்டணம். இம்ரான், யூனிஸ் கான்,சுலைமான் சேட், மாநில இளைஞரணி தலைவர் அல்.ஆசிக், மாநில தொண்டரணி தலைவர் அபுதாஹிர்,மாநில ஊடகப்பிரவு செயலாளர் அஜ்மல் கான், மாநில செயலாளர்கள் ஷாகீர் கான், கம்பம். சாதிக், மாநில தொண்டரணி ஆசிப், சென்னை மண்டலத்தலைவர் நூர்முஹம்மது. மண்டலச் செயலாளர் காதர், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உமர், வடசென்னை மாவட்ட தலைவர் அப்துல் சமத், வடசென்னை மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், கிழக்கு மாவட்ட செயலாளர் நெல்லை கலீல், தென்சென்னை மாவட்ட தலைவர் இலியாஸ், தென்சென்னை மாவட்ட செயலாளர் அல்தாப், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லா, திருவள்ளூர் மாவட்டம் பாஷா, திருவள்ளூர் மாவட்டம் காதர் பாஷா, வேலூர் மாவட்ட தலைவர் சவுகத் அலி மற்றும் நிர்வாகிகள்.

தடா J அப்துல் ரஹும்
மாநிலத் தலைவர்
இந்திய தேசிய லீக் கட்சி

Recent Posts

Image

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴