இராஜராஜ சோழனின் திருவுறுவ படத்தை கோவில்களில் வைக்க இந்து தமிழர் பேரவை சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை
சென்னை, அக்டோபர் 3, 2021: இந்து தமிழர் பேரவையின் தலைவர் சிவனடியார் கோபால் இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இல்லத்தில் சந்தித்து மாமன்னர் இராஜராஜ சோழனின் திருவுறுவ படத்தை அனைத்து கோவில்களிலும் வைக்க மனு கொடுத்தார். அவருடன் ஆதி சிவ சோழர் புலி படை தலைவர் சிவபாலன்.மு.தென்னூரான் உடன் இருந்தார்.
Youtube Video👇👇
அமைச்சரை சந்தித்து சிவனடியார் கோபால் பின்னர் பேட்டி அளித்து கூறியதாவது:
மேலும் மற்ற கோரிக்கைகளாக அனைத்து கோவல்களிலும் திருவாசகம் ஓதவும், தமிழில் அர்ச்சனை செய்யாத அர்ச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தற்போது மூன்று கோவில்களில் மட்டுமே அன்னதான திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது அதை விரிவாக்கி அணைத்து கோவில்களிலும் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார்.
தமிழர் பேரவையின் தலைவர் சிவனடியார் கோபால், அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு திருவாசகம் நூல் வழங்குதல் |
மேலும் Queen's Land இடமிருந்து கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் அனைத்து கோரிக்கைகளையும் ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க இருப்பதாக நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
****