பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன்மெண்ட் தொழிலாளர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் எதிர்ப்புபோராட்டம்


சென்னை, ஜூலை 13, 2021: பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன்மெண்ட் தொழிலாளர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு போராட்டத்தை  கண்டோன்மெண்ட் அலுவலகம் முன்பு இன்று நடத்தினர்.

Video👇👇


அப்போது அவர்கள் கூறியதாவது, நமது கண்டோன்மெண்ட் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் 10 வருடம், 20 வருடம் மற்றும் 30 வருடம் பணி முடித்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். கண்டோன்மெண்ட் போர்டு கீழ்கண்ட தேதிகளில் 25 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட தீர்மானம் நிறைவேற்றி, பூனாவிற்கு நான்கு கோப்புகள் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

போர்டு தீர்மானம் தேதி: 18.02.2018; பணியாளர்களின் எண்ணிக்கை : 15 ; பூனா அனுமதிக்காக அனுப்பப்பட்ட நாள் : 14.03.2019

போர்டு தீர்மானம் தேதி: 27.02.2020; பணியாளர்களின் எண்ணிக்கை : 10; பூனா அனுமதிக்காக அனுப்பப்பட்ட நாள் : 01.06.2020

கோப்பு 1:
செலக்சன் கிரேடு: கால தாமத்தினால் பாதிக்கப்பட்ட 25 தொழிலாளர்கள்

கோப்பு 2:
ஒரு நபர் குழு சம்பள விகிதம்

கோப்பு 3:
ஓட்டு னர் சம்பள விகிதம்

கோப்பு 4:
சுகாதார கண்காணிப்பாளர் சம்பள விகிதம்

மேற்கண்ட கோப்புகள் சுமார் 4 வருடங்களாக பூனாவில் நிலுவையில் உள்ளதை உணர முடிகிறது. கண்டோன்மெண்ட் பணியாளர்களின் சட்டப்படியான ஊதியத்தை பெறுவதற்கு நான்கு வருடங்களாக போராட வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. இந்த கோப்புகள் மீது டைரக்டர் அலுவலகம் அலட்சியம் காட்டுவதை உணர முடிகின்றது. கண்டோன்மெண்ட் நிர்வாகமும் தனது தொழிலாளர்களுக்கு உரிய சம்பள விகிதத்தை பெற்றுத் தர தவறியுள்ளது தெரிய வருகின்றது.

கணினி மயமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலையில் டைரக்டர் அலுவலகத்திலிருந்து கணினியில் ஒரு தகவல் கேட்டால் மதியம் 5 மணிக்குள் அன்றே அதற்கான அறிக்கையை கண்டோன்மெண்ட் பணியாளர்கள் அளிக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக தொழிலாளர்களின் சம்பள விகிதம் சம்பந்தமான கோப்புகளை 4 வருடங்களாக டைரக்டர் அலுவலகம்கிடப்பில் போட்டிருப்பது நியாயம்தானா? டைரக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மனசாட்சியை இந்த காலதாமதம் எந்த காலத்திலாவது கேள்வி கேட்கவில்லையா என்பது சங்கத்தின் கவலையாகும்.

இதனால் டைரக்டர் அலுவலகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும் இந்த கோப்புகளின் மீது உரிய ஆணையை பெற தவறிவரும் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தை கண்டித்தும் ஊழியர்கள் 13-07-2021, அன்று பணியில் ஈடுபட்டிருக்கும் முழு நேரமும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

சம்பந்தப்பட்ட அலுவர்கள் இந்த கோப்புகளின் மீது ஒப்புதல் வழங்கி தொழிலாளர்களின் சட்டப்படியான சம்பள விகிதங்களை பாதுகாத்திட உரிய ஆவண செய்ய சங்கம் வேண்டி கேட்டு கொள்கிறது.

****

Recent Posts