"காதலர்களாகப் பிரிவோம்" அரபு கவிதைத் தொகுப்பு தமிழில் வெளியீடு


சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறை தலைவர் பேராசிரியர் அ. ஜாகிர் ஹுசைன் அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்த சிரியா நாட்டுக் கவிஞர் நிசார் கப்பானியின் "காதலர்களாகப் பிரிவோம்" கவிதைத்தொகுப்பு 09.01.2024 அன்று காலை 11.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் மெரினா வளாகத்தில் வெளியிடப்பட்டது.

Youtube video link 👇 

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கவிஞர் வெய்யில் நூலைப் பெற்று திறனாய்வுரை வழங்கினார். மெரினா வளாக இயக்குநர் பேராசிரியர் கோ. பழனி தலைமையுரையாற்றினார். தமிழ் மொழித்துறைத் தலைவர், பேராசிரியர் ய. மணிகண்டன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் ஏகாம்பரம், பேராசிரியர் வாணி அறிவாளன் வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் நிர்மலர்ச்செல்வி வரவேற்றார். கோ. மணிகண்டன் நிகழ்ச்சியைத் தொகுத்தார். இறுதியில் பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் ஏற்புரையாற்றினார். விழாவில் ஏராளமான மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

****

Recent Posts