ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் மாபெரும் திறப்பு விழா || உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு


சென்னை, டிசம்பர் 22, 2021:
திரு. உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆவின் நிறுவனம் சிறப்புடனும், இலாப நோக்கத்துடனும் செயல்பட உத்தரவிட்டுள்ளார்.

Youtube Video👇👇

அதன்படி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்களின் வழிகாட்டுதல் படி ஆவின் நிறுவனம் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. இதன் தொடர் நிகழ்வாக இன்று திரு. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.


அம்பத்தூர் தொழிற்பேட்டையில், ஆவின் பால்பண்ணை வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம், பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் கட்டடம், இயந்திரம், சாலை வசதி, சுற்றுச்சுவர் உட்பட அனைத்து செலவீனங்களையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏற்றுக்கொண்டு, 'ஆவின் சில்லறை விற்பனை' நிலையத்தினை இயக்கிட / பராமரித்திடும் பொறுப்பினை ஆவின் ' இணையம் வழி நடத்திட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.




இந்த ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தில், சென்னை ஆவின் இணையத்தின் வாகனங்கள், சென்னை பெருநகர பால்பண்ணைகளில் இயங்கி வரும் பால் பாக்கெட் ஒப்பந்த வாகனங்கள், மாவட்ட ஒன்றிய வாகனங்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய ஒப்பந்த வாகனங்கள், ஒன்றிய பால் டேங்கர் ஒப்பந்த வாகனங்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி ஒரு சிறிய அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் நாளொன்றுக்கு 4000 லிட்டர் பெட்ரோல், 6000 லிட்டர் டீசல் மற்றும் ஆயில் போன்றவை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தில், விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் போன்ற எரிபொருள்களின் தரம் மற்றும் அளவு என்றும் நிரந்தரமாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜோசப் சாமுவேல் அவர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு கூடுதல் தலைமை செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் செயலாளர் திரு. தென்காசி.சு.ஜவகர், இ.ஆ.ப, ஆவின் மேலான்மை இயக்குநர் திரு. ந. சுப்பையன் இ.ஆ.ப , திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., திருமதி. கா. பொற்கொடி இணை நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு சில்லறை விற்பனை தலைவர் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெட் திரு. பா. குமராவேல், திரு. அபிசேக் சர்மா, இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிட்டெட், சென்னை கோட்டம் சில்லறை விற்பனையாளர், ஆவின் அரசு உயர் அலுவலர்கள், இந்தியன் ஆயில் நிறுவனத்தை சார்ந்த உயர் அலுவலர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

****

Recent Posts

𝘜𝘮𝘢 𝘌𝘺𝘦 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤, 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘗𝘙𝘌𝘚𝘉𝘠𝘖𝘕𝘋 𝘓𝘢𝘴𝘦𝘳 𝘛𝘳𝘦𝘢𝘵𝘮𝘦𝘯𝘵 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘳𝘳𝘦𝘤𝘵𝘪𝘰𝘯 𝘰𝘧 𝘙𝘦𝘢𝘥𝘪𝘯𝘨 𝘎𝘭𝘢𝘴𝘴𝘦𝘴 𝘱𝘰𝘸𝘦𝘳; 𝘍𝘪𝘳𝘴𝘵 𝘵𝘪𝘮𝘦 𝘪𝘯 𝘛𝘢𝘮𝘪𝘭𝘯𝘢𝘥𝘶

14𝘵𝘩 𝘊𝘰𝘯𝘷𝘰𝘤𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘦𝘭𝘥 𝘢𝘵 𝘉.𝘚.𝘈𝘣𝘥𝘶𝘳 𝘙𝘢𝘩𝘮𝘢𝘯 𝘊𝘳𝘦𝘴𝘤𝘦𝘯𝘵 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘰𝘧 𝘚𝘤𝘪𝘦𝘯𝘤𝘦 𝘢𝘯𝘥 𝘛𝘦𝘤𝘩𝘯𝘰𝘭𝘰𝘨𝘺; 𝘛𝘰 𝘣𝘦𝘤𝘰𝘮𝘦 𝘢𝘯 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳 𝘐𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦