ஆவின் பால் விலை குறைப்பு || தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க பால் வளத்துறை அமைச்சர் நாசர் துவக்கினார்

சென்னை, மே 16, 2021: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் பொதுமக்கள் அணைவரும் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார்கள், அதில் இரண்டாவதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்ய இன்று முதல் (16.05.2021) அமலுக்கு வருகிறது. 

Video:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்கள் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.05.2021 இன்று காலை 11.00 மணி அளவில் துவக்கி வைத்தார்.

விற்பனை விலை -
இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து இன்று முதல் ஆவின் பால் பெற்றுக்கொள்ளலாம்

அதன் விலை விவரம் வருமாறு: சமன்படுத்தப்பட்ட 1 லிட்டர் பால் 43 ரூபாயில் இருந்து சில்லரை விற்பனை கடைகளில் 40 ரூபாய்க்கும், பால் அட்டைதாரர்களுக்கு 37 ரூபாய்க்கும், அரை லிட்டர் பால் 21 ரூபாய் 50 காசில் இருந்து முறையே 20 ரூபாய்க்கும், 18 ரூபாய் 50 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நிலைப்படுத்தப்பட்ட அரை லிட்டர் பால் 23 ரூபாய் 50 காசில் இருந்து முறையே 22 ரூபாய் மற்றும் 21 ரூபாய்க்கும், நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் 25 ரூபாய் 50 காசில் இருந்து முறையே 24 ரூபாய் மற்றும் 23 ரூபாய்க்கும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் 20 ரூபாயில் இருந்து முறையே 18 ரூபாய் 50 காசு மற்றும் 18 ரூபாய்க்கும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. வித்தியாச தொகை ஈடு செய்யப்படும்.

எனவே தற்போது நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைக்கு உண்டான வித்தியாச தொகை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும் போது ஈடு செய்யப்படும்.

மேலும் தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொது மக்களுக்கு சென்னை முழுவதும் எவ்வித தடையுமின்றி பால் மற்றும் பால் உப்பொருட்கள் கிடைக்க ஆவின் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு விநியோகம் செய்வதற்காக இணயதள சேவையான ZOMATO மற்றும் DUNZO மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் நந்தனம் மேலாண்மை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:044-2346457523464576, 23464578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300

எனவே இதனை பொது மக்கள் அணைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் அவர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்கள், ஆவின் மேலாண்மை இயக்குநர் திரு. இரா.நந்தகோபால் இ.ஆ.ப அவர்கள் , இணை நிர்வாக
இயக்குநர் திரு.N.முருகேசன் அவர்கள் இவர்களுடன் ஆவின் பொது மேலாளர் (விற்பனை) திரு.G.ரமேஷ்குமார் அவர்கள், பொது மேலாளர் (நிர்வாகம்) திருமதி.K.பொற்கொடி அவர்கள், உதவி
பொது மேலாளர்கள் (விற்பனை) மற்றும் ஆவின் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலாண்மை இயக்குநர்
த.நா.பா.உ.கூ இணையம்

****

Recent Posts