மே 26-ல் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை, மே 13, 2022: மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தலைவர் N.L.சீதரன் தலைமையில் மே 26-ல் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடப்பது குறித்து இன்று பத்திரிக்கையா ளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பொதுச்செயலர் K.ராகவேந்திரன் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Youtube Video 👇👇 அப்போது அவர் பேசியதாவது: 1. அரசு கைகழுவும் போக்கு: தமிழகத்தில் மாநில அரசு சார்பில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் அரசுப் பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்கி வருகின்றன. இக் கழகங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் பல ஆயிரம் பேர் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஊழியர்களாவர். 85,000 ஓய்வூதியர்கள் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஓய்வூதியம் பெற்றுவருகின்றனர் அனைவருக்கும் அரசு ஓய்வூதியம் அளிக்கும் என்பது தான் தனியாரிடமிருந்து தேசிய மயமாக்கப்பட்ட பொழுது தமிழக அரசு அளித்து வாக்குறுதியும் உறுதிமொழியுமாகு...