தென் மாவட்டங்களில் 3 வது இடத்தை பிடிப்போம்: சென்னைஅடையாரில் மக்கள் முன்னேற்ற கட்சியின் மாநில தலைவர் முத்துசாமி பேட்டி
சென்னை: வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் முன்னேற்ற கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை அடையாறில் உள்ள தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. Press Meet video link 👇 இந்த கூட்டத்திற்கு மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் திரு.முத்துசாமி அவர்கள் தலைமை தாங்கினார். கட்சியின் நிலைப்பாடுகள் குறித்துப் பொதுச் செயலாளர் திரு.ஜெய வேல் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித் அவர்கள் தமிழக அரசியல், இந்திய அரசியல், பொருளாதாரம், சமூகம் குறித்தப் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்பொழுது தங்களுடைய கட்சிக்கு தென் மாவட்டங்களில் அதிக அளவு வரவேற்பு இருப்பதாகவும் கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்ததாகவும் கூறினர். மேலும் திராவிட கட்சிகள் எந்தவித நன்மையும் தமிழக மக்களுக்கு செய்யவில்லை எனவும் தங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லா ஆட்சியை தருவதாகவும் கூறினர். மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியி...