Tamil Nadu Thowheedh Jamaath South Chennai Inaugurated Assistance Centre for Covid Affected Persons
சென்னை: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை எடுத்துரைக்கும் வண்ணம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் தலைமை அலுவலகத்தில் அரசு ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் இன்று 29.05.2021 மாலை 4.00 மணி அளவில் கொரோனா வழிகாட்டுதல் மையம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில செயலாளர் E. பாரூக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . Video👇👇 இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் M. ஹபிபுல்லாஹ் பாஷா அவர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர் முஹம்மத் பயாஸ், மாவட்ட துணை தலைவர் சித்திக், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சர்பராஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இந்த வழிகாட்டுதல் மையம் மூலம் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், ஆம்புலன்ஸ் சேவை, அவசர இரத்த தான சேவை கொரோனா நோய் தொற்றினால் இறந்த அணைத்து சமுதாயத்தினரை அரசு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உணவின்றி இருக்கும் மக்களுக்கு உணவு அளிப்பது, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு அள...