இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா: ஆசிரியர் தினம், மாணவர் வரவேற்பு & HCAS இன்ஃப்ளுயன்சர் பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை, ஆகஸ்ட் 30, 2026: இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி (HCAS) வளாகத்தில் ஆசிரியர் தின கொண்டாட்டம், 2026-ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா (Freshers’ Day) மற்றும் “HCAS Influencer” என்ற புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா என முப்பெரும் விழா உற்சாகமாக நடைபெற்றது. 

இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா: ஆசிரியர் தினம், மாணவர் வரவேற்பு & HCAS இன்ஃப்ளுயன்சர் பாடத்திட்டம் அறிமுகம்

ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். HCAS இயக்குநர் டாக்டர் சூசன் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் உயர்கல்வித் துறை பிரமுகர்கள் பங்கேற்றனர். 

HCAS-ன் 30 ஆண்டுகால பயணத்தைப் பதிவு செய்யும் சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற Freshers’ Day விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன; பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. கல்லூரியின் துணை இயக்குநர் திரு. டேவிட் ரயன் வரவேற்புரையாற்றினார். 

மாணவர்களின் படைப்பாற்றல், தகவல் தொடர்புத் திறன் மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “HCAS Influencer” புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

சமூக ஊடகங்கள் மூலம் கல்லூரி சமூகத்துடன் மாணவர்கள் தீவிரமாக இணைவதுடன், HCAS-ன் துடிப்பான வளாக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களை டிஜிட்டல் இன்ஃப்ளுயன்சர்களாக உருவாக்குவதே இப்பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

கல்வி, திறமை, படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்களில் HCAS கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முப்பெரும் விழா வெளிப்படுத்தியது.

****