கிரிப்டோ-டு-மெத்தபெட்டமைன்... கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்... பாயுமா நடவடிக்கை?

கோவையில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் உண்மைத் தன்மையை உரிய முறையில் விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மத்தியில் வலுத்து வருகிறது. ‘போதையில்லா தமிழகம்’ என்ற இலக்கை நோக்கி அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட விலை உயர்ந்த போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

கிரிப்டோ டு மெத்தபெட்டமைன்... கோவை, சென்னையில் சுதந்திரமாக சுற்றும் போதைப்பொருள் மன்னன்... பாயுமா நடவடிக்கை?

கேஷ்பே எனக் கூறப்படும் போலி கிரிப்டோகரன்சி திட்டத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான அரவிந்த் என்பவர், புதுச்சேரி காவல்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கோவை மற்றும் சென்னையில் அவர் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும், இரவு நேர கேளிக்கை விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களின் பப்களில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதுடன், அவற்றின் விற்பனையிலும் ஈடுபடுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், இளம் பெண்களை போதைப்பொருட்களுக்கு அடிமையாக்குதல், அவர்களை மிரட்டுதல் மற்றும் பணம் பறித்தல், தொழிலதிபர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்தல், பிறரது GPay கணக்குகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. அதேபோல், கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவை அனைத்தும் தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்பதால், அவற்றின் உண்மைத் தன்மையை காவல்துறை முழுமையாக விசாரித்து, ஆதாரங்கள் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாடு குறித்த சந்தேகம் இருந்தால், சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அரவிந்துக்கு அரசியல் அல்லது அதிகாரமிக்க நபர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறுவதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் உள்ளதா என்பதை காவல்துறை வெளிப்படையாக விசாரிக்க வேண்டும். மேலும், போதைப்பொருட்கள் கோவை மற்றும் சென்னைக்கு எவ்வாறு வருகின்றன, அவற்றின் விநியோகச் சங்கிலியில் யார் உள்ளனர், பணப்பரிவர்த்தனைகள் எவ்வாறு நடைபெறுகின்றன, கிரிப்டோ மோசடி வழக்கில் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் நிலை என்ன என்பதையும் விசாரணை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.

பெண்கள் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு காவல்துறை குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு நபராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமமாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கையும், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனத் தெரியவந்தால் அதற்கான தெளிவான விளக்கமும் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai