இம்ப்காப்ஸ லிமிடெட் (IMPCOPS) நிறுவனத்தில் 80வது ஆண்டு நிறுவன தின விழா (Foundation Day) கொண்டாட்டம்


சென்னை, செப்டம்பர் 12, 2024:  இம்ப்காப்ஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்துசெய் நிலையம் மற்றும் பண்டகசாலை லிட்.,X-185, ஒரு பன்மாநில கூட்டுறவு நிறுவனமாகும். இங்கு சுமார் 1200க்கும் மேற்பட்ட தரமான சித்தா,ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கப்பட்டு மத்தியஅரசு மற்றும் மாநில அரசு மருத்துவமனைகளுக்கும், உள்ளாட்சி நிறுவனங்கள் நடத்திடும் மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 18,000 க்கும் மேற்பட்ட அரசு பதிவுப்பெற்ற இந்தியமுறை மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இம்ப்காப்ஸ லிமிடெட் (IMPCOPS) நிறுவனத்தில் 80வது ஆண்டு நிறுவன தின விழா (Foundation Day) கொண்டாட்டம்
இந்த நிறுவனத்தின் 80வது ஆண்டு விழா நாளை 12.09.2024 அன்று காலை 11.30 மணியளவில் எண்.34-37, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை - 600 041 என்ற முகவரியில் நடைபெற்றது.

Youtube Video link 👇 

அப்போது தலைமை அலுவலகத்தில் உள்ள கேப்டன் சீனுவாசமூர்த்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு பேராசிரியர். மரு. R. மீனாகுமாரி, இயக்குநர், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தாம்பரம், சென்னை அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர். மரு.N.J.முத்துகுமார்மரு.R.கண்ணன்,M.D(S)., தலைவர் இம்ப்காப்ஸ், துணைத்தலைவர், இயக்குநர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

****

Recent Posts

𝘎𝘌𝘔 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭'𝘴 𝘚𝘊𝘖𝘗𝘌2025 - 𝘐𝘯𝘵𝘦𝘳𝘯𝘢𝘵𝘪𝘰𝘯𝘢𝘭 𝘊𝘰𝘯𝘧𝘦𝘳𝘦𝘯𝘤𝘦 & 𝘞𝘰𝘳𝘬𝘴𝘩𝘰𝘱 𝘰𝘯 𝘈𝘥𝘷𝘢𝘯𝘤𝘦𝘥 𝘛𝘩𝘦𝘳𝘢𝘱𝘦𝘶𝘵𝘪𝘤 𝘌𝘯𝘥𝘰𝘴𝘤𝘰𝘱𝘺 𝘚𝘦𝘵𝘴 𝘕𝘦𝘸 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴 𝘪𝘯 𝘎𝘢𝘴𝘵𝘳𝘰𝘪𝘯𝘵𝘦𝘴𝘵𝘪𝘯𝘢𝘭 𝘊𝘢𝘳𝘦