மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் முப்பெரும் விழா


சென்னை: மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு விழா, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகச் செயலாளர், மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு வி.ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்தநாள் விழா, அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக சென்னை மதுரவாயலில் உள்ள SPP கார்டனில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் - தேசியத் தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

Youtube Video Link 👇👇


மெட்ராஸ் சிட்டி பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திருமதி.பாலிகா ஜெயச்சந்திரன் அவர்கள் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு தொல்.திருமாவளவன் அவர்களும், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் திரு.க கணபதி அவர்களும், ஓய்வு பெற்ற உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு.வள்ளிநாயகம் அவர்களும், இயக்குனர் திரைப்பட நடிகர் திரு.பாக்யராஜ் அவர்களும்,  அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களும், மெட்ராஸ் சிட்டி ப்ராப்பட்டிஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் மற்றும் உறவுகளும், நண்பர்களும், நலவிரும்பிகளும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai